முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் மீண்டும் மதக்கலவரம்: 5 பேர் சாவு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

தன்வீ, அக்.4 - மியான்மரில் மீண்டும் மதக்கலவரம்  வெடித்தது. முஸ்லிம்களுக்கும், புத்த ம தத்தினருக்கும் நடந்த வன்முறையில் பல வீடுகள், மசூதிகள் தீ வைதிது எரிக்கப்பட்டன. இதில் பெண் உள்பட5 பேர் இறந்தனர். இதையடுத்து பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

        மியான்மரில் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் மீது ஒரு பிரிவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் இறந்தனர்.  வீடு, கடைகள் சூறையாடப்பபட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முகாம்களில் தங்கி உள்ளனர். கலவரப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 இந்நிலையில் மியான்மர் அதிபர் தெயின் செயின் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் மேற்கு ராக்ஹைன் மாகாணம் தன்வீ நகரில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் வீடு, மசூதிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் பெண் உள்பட5 பேர் இறந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராக்ஹைன் மாகாணத்தில் கடந்த ஓராண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில்250 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் மியான்மரில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony