முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேச துரோக வழக்கில் ஆஜராக முசாரப்புக்கு கோர்ட் சம்மன்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச.15 - தேச துரோக வழக்கில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசார ப்புக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் 24_ம்தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முசாரப் மீது அரசு தேச துரோக வழக்கு தொடர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2007_ம் ஆண்டுமுசாரப் அதிபராக இருந்தார். அப்போது அவசர நிலையை பிர கடனப்படுத்தியது,  நீதிபதிகளை கூண்டோடு சஸ்பென்ட் செய்தது, பெனசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டது. லால் மசூதியில் முற்றுகையிட்டிருந்த தீவிரவாதிகளை விரட்ட ராணுவத்தை அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகள் முசா"ப் மீது உள்ளன. தேச துரோக வழக்கும் தொடரப்பட்டது.

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட வந்த முசாரப்பை கைது செய்த அரசு அவரை வீட்டுக் காவலில் சிறை வைத்தது. சில வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. துபாயில் இருக்கும் தனது தாயை சந்திக்க அவர் அனுமதி கேட்டிருந்தார். முசாரப் மீதான வழக்கு விசாரணை விரைந்து முடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.  பாகிஸ்தான் உள்துறை செயலாளர் ஷாகித்கான் முசாரப்புக்கு எதிராக தேச துரோக வழக்கை கோர்ட்டில் தொடர்ந் தார். இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு கோர்ட் விசாரிக்க உள்ளது.

இந்த வழக்கில் 24_ம்தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  முசாரப்புக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ வழங்கப்படலாம் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேச துரோக வழக்கில் முன்னால் அதிபரை விசாரிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

    

                         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago