முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டு மிரட்டல்: சென்ட்ரலில் போலீசார் தீவிர சோதனை

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.26 - சென்னையிலிருந்து புதுடெல்லி செல்லும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை செய்ததுடன் ரெயில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (ஜி.டி  எக்ஸ்பிரஸ்) வழக்கம் போல் நேற்றுமுன்தினம் இரவு 7.15 மணிக்கு வழக்கம்போல் புறப்பட தயாராக இருந்தது. அப்போது சென்னை மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. அதில்,'கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில்   வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்தில் வெடிக்கும்' எனக்கூறி தொடர்பை துண்டித்தார். 

இது தொடர்பாக உடனடியாக சென்ட்ரல் ரெயில்வே போலீசாருக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போ ரயில்  பிளாட்பாரத்தை கடந்து சென்று விட்டது.

இதைதொடர்ந்து உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சில நிமிடங்களில் ரெயிலை பின்னோக்கி மீண்டும் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வர செய்தனர். இதைதொடர்ந்து பயணிகள் அனைவரும் ரெயிலிலிருந்து இறக்கப்பட்டனர். 

மேலும், அனைத்து பெட்டிகளிலும் ரெயில்வே போலீசார்,  பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் <டுபட்டனர். 45 நிமிடங்கள் நீடித்த இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து 8.05 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து சென்னை சென்டிரலிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்