Idhayam Matrimony

அமெரிக்கா, கனடாவில் கடும் பணிப்புயல்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

அகஸ்டா, டிச,27 - அெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான பனிபுயலுக்கு 11 பேர் உயிரிழந்தனர். பனிப்புயல் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை இரவு கிளம்பவிருந்த 7,000-க்கும் அதிகமான விமானங்கள் தாமதாகப் புறப்பட்டுச் சென்றன. இதனால் சிக்காகோ, நியூயார்க், வாஷிங்டன் மாகாணங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாடத்திற்காக புறப்பட்டவர்களின் பயணங்கள் தடைப்பட்டன. அதே போன்று கனடாவில் ஏற்பட்ட பனிப்புயலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 90,000 க்கும் அதிகமான வீடுகளில் இன்றி தவித்துவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அங்கு நிலவிய உறைய வைக்கும் தட்பவெப்பத்திலிருந்து தப்பிக்க, ஜெனரேட்டரை பயன்படுத்தியதால் ஏற்பட்ட கார்பன் மோனாக்ஸைடு வாயுக்கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர். டொராண்டோ நகரத்தில் ஜெனரேட்டர் பயன்பாட்டினால் ஏற்பட்ட கார்பன் மோனாக்ஸைடு வாயுக்கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நகர மேயர் ராப்ஃபோர்ட் தெரிவித்தார். பிரிட்டனில் புதன்கிழமை ஏற்பட்ட கடும் புயல் மற்றும் கன மழைக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். அங்கு கிறிஸ்துமஸ் தினத்துக்கான கொண்டாட்டங்கள் தடைப்பட்டதோடு, 10,000-க்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் சுமார் 1.50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ரஷியாவில் விபத்துக்குள்ளான சரக்கு கப்பல் ஒன்றின் மாலுமி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த புயல் பாதிப்பால் பிரான்ஸ், இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் விமான, தரை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago