முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ரூ.20 கோடி

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - 16 அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை  ரூ.20 கோடி ரூபாய் செலவில்  மேம்படுத்த ஒப்புதல் வழங்கியும், நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் . 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நலமான சமுதாயமே வளமான நாட்டிற்கு அடிப்படையாகும். மாநிலத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்களை தீட்டிமுதலமைச்சர் ஜெயலலிதாஅவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு நோய் சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவமனைகளை நாடி வரும்  பொதுமக்களுக்கு உயர்தர நவீன சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த  முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை  அரசு பொது மருத்துவமனையில் உள்ள 4 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த  3 கோடி ரூபாய், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 10 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம் படுத்த 3 கோடி ரூபாய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள  8 அறுவை சிகிச்சை அரங் கங்களை மேம்படுத்த 2 கோடியே 50 லட்சம் ரூபாய். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையிலுள்ள 3 அறுவை சிகிச்சை அரங் கங்களை மேம்படுத்த  1 கோடி ரூபாய், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள  2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய் என  12 கோடி ரூபாயும்,  மற்றும் பரமக்குடி, திருமங்கலம், சங்கரன்கோவில், அறந் தாங்கி, திருமயம், திருச் செந்தூர், பொள்ளாச்சி, அரக்கோணம், கள்ளக் குறிச்சி, குன்னுனூர், மன்னார் குடி, திருச்சி, திருச்செங்கோடு, பேரணாம்பட்டு, செய்யார், பென்னாகரம் ஆகிய  16 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒவ்வொரு மருத்துவ மனைக்கும் 50 லட்சம் ரூபாய்  என  8 கோடி  ரூபாயும்  என  மொத்தம் 20 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒப்புதல் வழங்கியும், நிதி ஒதுக்கீடு செய்தும் முதல் அமைச்சர் ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்க வழிவகை ஏற்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்