முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் மீதான சொத்து வழக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சிவகங்கை, டிச.28 - முன்னாள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சாரக பொறுப்பு வகித்தவர் கே.ஆர்.பெரியகருப்பன். தற்போது இவர் திருபத்தூர் சட்டபேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். அமைச்சர் பொறுப்புவகித்த கே.ஆர்.பெரியகருப்பன் தனது வருமானத்துக்கு அதிமாக சொத்துச் சேர்த்ததாக சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கே.ஆர்.பெரியகருப்பன் , அவரது மனைவி பிரமா, தாயார் கருப்பாயி அம்மாள், மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோர் மீது கடந்த பிப்.9-ம் தேதி சிவகங்கை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான 5 பேரிடமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்.10,அக்.1, அக்.29, நவ.26 மற்றும் டிச.26 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அவரது மைத்துனர் செந்தில்வேல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு நீதிபதி மீராசுமதி ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்