முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் ஊடுருவல்-பாகிஸ்தானுக்கு சீனா அட்வைஸ்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,மே.22 - தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் வருவதை தடுக்க எல்லை நெடுகிலும் வேலியை அடைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சீனா திடீரென்று அறிவுரை கூறியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் கூட்டு சதித்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து சீனா இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது. 

இந்தநிலையில் இந்தியா உள்பட அண்டை நாடுகளின் எல்லைப்பகுதியில் இருக்கும் வேலிகளை பழுதுபார்த்து பலப்படுத்த வேண்டும். வேலி அமைக்கப்படாத பகுதியில் வேலி போட வேண்டும் என்று பாகிஸ்தானை சீனா கேட்டுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் இன்னும் தீவிரவாதிகளின் பயிற்சி மையமாக இருக்கிறது என்றும் சீனா கவலையை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் கிலானி சீனாவில் பயணத்தை மேற்கொண்டுவிட்டு நேற்றுமுன்தினம்தான் இஸ்லாமாபாத் திரும்பினார். சீனாவில் பயணம் செய்தபோது கிலானிக்கு இந்த அட்வைஸை சீனா தலைவர் தெரிவித்தாக தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி நியூஸ் டெய்லி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, மற்றும் ஒற்றுமைக்கு சீனா எப்போதும் ஆதரவு தரும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். ஆனால் எல்லை நெடுகிலும் வேலி அமைத்து சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் தன்னுடைய கொள்கையிலும் லட்சியத்திலும் வெற்றிகாண முடியும் என்றும் சீனா இந்த ஆலோசனையை கூறியுள்ளது. அதாவது காஷ்மீரை பிரிக்க பாகிஸ்தானுக்கு சீனா தந்திரம் சொல்லிக்கொடுக்கிறது. இந்த ஆலோசனையின் ரகசியம் அதுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!