முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிரட்டி பணம் பறிப்பது விஜயலட்சுமியின் வாடிக்கை- சீமான் பேட்டி

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 6 - மிரட்டி பணம் பறிப்பது நடிகை விஜயலட்சுமியின் வாடிக்கை என்று டைரக்டர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார். காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார். விஜயலட்சுமி தான் கொடுத்த புகார் தொடர்பாக சில ஆதாரங்களை போலீசிடம் கொடுத்துள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு சீமானுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று கூறியிருந்த டைரக்டர் சீமான் மீண்டும் அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:​
விஜயலட்சுமியை நான் நேரில் பார்த்து பேசியே 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. வாழ்த்துக்கள்  படத்தில் நடித்தபோது கூட நான் அவருடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பணம் கேட்டு மிரட்டி நான் பணியாததால் என் மீது புகார் கொடுத்துள்ளார். அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள். மிரட்டி பணம் பறிப்பது விஜயலட்சுமிக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூட சமீபத்தில் ரூ.5 லட்சத்தை இழந்துள்ளார். அவரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார். விஜயலட்சுமி யார்​யாருடன் பழகி உள்ளார் என்பது ஊரறிந்த விஷயம். அரசியலில் எனக்கு இருக்கும் புகழை கெடுக்க திட்டமிட்டு நடத்தப்படும் இந்த சதித்திட்டத்தால் என்னை வீழ்த்தி விட முடியாது.
இவ்வாறு சீமான் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony