Idhayam Matrimony

கர்நாடகத்தில் எடியூரப்பா அரசுக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஜூன்.14 - கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக 2 மாதகால பிரசாரத்தை நாளை முதல் காங்கிரஸ் நடத்துகிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. தற்போது முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா அரசு இருக்கிறது. மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசை அகற்றும் வகையில் மக்களிடம் சென்று பிரசாரம் செய்யவும் காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. இதற்காக காங்கிரஸ் கட்சி ஆற்றியுள்ள தொண்டுகளை மக்களிடம் எடுத்துரைக்கவும் முதல்வர் எடியூராப்பா அரசு அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்விட்டது என்று மக்களிடம் எடுத்துக்கூறவும் காங்கிரஸ் நாளை முதல் 2 மாத காலத்திற்கு பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் பிரசாரம் தொடங்கப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஜி பரமேஸ்வரா நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். 2 மாத காலம் நடக்கும் இந்த பிரசாரத்தின்போது அனைத்து தொகுதிகளிலும் உள்ள எல்லா கிராமங்களிலும் உள்ள மக்களை சந்தித்து காங்கிரஸ் சாதனைகளையும் எடியூரப்பா அரசின் தோல்வியையும் மக்களிடம் எடுத்துக்கூறப்படும் என்றும் பரமேஸ்வரா தெரிவித்தார். 

கடந்த 125 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆற்றியுள்ள தொண்டினையும் சுதந்திர இந்தியாவில் மத்தியில் ஜவஹர்லால் நேரு உள்பட காங்கிரஸ் பிரதமர்களால் இந்த நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்தும் விளக்கும் வகையில் நோட்டீசுகள் அச்சடித்து மக்களிடம் கொடுக்கப்படும். அனைத்து கிராமங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் 1000 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் பரமேஸ்வரா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago