முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை டால்ஃபின் பள்ளியில் பள்ளி திறப்பு விழா நாள்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூன்.16 -   மதுரை டால்ஃபின் பள்ளியில் பேண்டு வாத்திய இசை முழங்க மிக்கி டொனால்டு, கரடி பொம்மை, டோராபூர் பொம்மை, செட்டியார் பொம்மை, ஜோக்கர் பொம்மைகள் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகமெங்கும் அனைத்து பள்ளிகளும் அரசு ஆணைக்கு இணங்க தொடங்கின. மதுரை டால்ஃபின் பள்ளியில் கோடை விடுமுறைக்குப் பின் நேற்று துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தனது 25 வது வெள்ளி விழா கல்வி ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வண்ணம் மாணவ, மாணவிகளுக்கு பேண்டு வாத்திய இசை முழங்க மிக்கி டொனால்டு, கரடி பொம்மை, டோராபூர் பொம்மை, செட்டியார் பொம்மை, ஜோக்கர் பொம்மைகளைக்கொண்டு பேண்டு வாத்திய இசை முழங்க பள்ளி தாளாளர் ராமநாதன் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு செய்தார். 

மேலும் பள்ளி முதல் நாள் துவக்க பிரார்த்தனையின் போது மாணவர்கள் கரகோசம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை பகுர்ந்து கொண்டனர். இந்த வித்தியாசமான பள்ளி துவக்க நாள் நிகழ்ச்சியை பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளியையும், பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரையும் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony