முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்று திறனாளிகளின் பராமரிப்பு தொகை உயர்வு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.18 - உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500-லிருந்து ரூ.1000-மாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவாகவும், செம்மையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், பதவியேற்ற அன்றே ஏழு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலியோர், மாற்று திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு மேற்காணும் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 16.5.11 அன்று ஆணையிட்டு 6.6.11 அன்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்ட இந்த ஓய்வூதியத்தை இந்த மாதம் முதலே அனைவரும் பெறலாம் என்றும் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், மனவளர்ச்சி குன்றியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் மற்றும் தடை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையை 500-லிருந்து 1000-மாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா 15.6.11 அன்று ஆணையிட்டார்.

முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ள இந்த உத்தரவின் மூலம் 76,407 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவார்கள். மேலும், இததிட்டம் செயல்படுத்தப்படுவதால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 46 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்