முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் நன்றி தெரிவித்து ஜெயலலிதா பேச்சு

புதன்கிழமை, 22 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி. ஜூன்.- 22- தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த”ர். தனக்கு வாக்களித்து பெருவாரியான வ”க்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் ரூ.19​0 கோடி திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டினார். பின்னர் பயன”ளிளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிமுக தொண்டர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கம்பரம்பேட்டை, ஜீயபுரம், அந்தநல்லூர், குழுமணி, உள்ளிட்ட 75 கிராமங்களில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா வாக்காளர் களுக்கு நன்றி தெவித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பறை, கேரளா ஜண்டா மேளம் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் தெய்வத்தை வணங்குவது போல முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து அம்மா அம்மா என்ற கோஷத்துடன் அவரை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்றனர்.
மேலும் பல்வேறு இடங்களில் ஒவ்வொரு பகுதி சார்பில் பட்டாசுகள் வெடித்தும், கொடிதோரணங்கள் சலசலக்க சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வழிநெடுகிலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக முதல்வரிடம் கொடுத்தனர். அதனை மிகவும் பணிவுடன் மனம்நோகாமல் அனைவரிடமும் முதல்வர் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் மூன்றாம் நிகழ்ச்சியாக முதல்வர் ஜெயலலிதா நேற்று ம”லை 4.50 மணிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சங்கம் ஓட்டலில் இருந்து புறப்பட்டார். முதலில் ஸ்ரீரங்கம் தொகுதியான கருமண்டபம், புங்கனூர், தீரன்நகர், ராம்ஜிநகர், மில்கேட், வண்ணான்கோவில், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், ஆழம்பட்டி புதூர், மரவனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை கையில் ஏந்தியபடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அம்மாபேட்டையில் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் அங்கு பயிலும் மாணவிகள் பல்வேறு பழங்கள் முன்வைத்து முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:​-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் என்னை பெருவாரிய”ன வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறசெய்து, மூன்றாவது முறையாக என்னை தமிழக முதல்வராக்கிய வாக்காள பெருமக்களாகிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீரங்கம் தொகுதி வாழ் மக்களின் நலனிற்காக அனைவரும் பயன் அடையும் வகையில் முதல் கட்டமாக 190 கோடி ரூபாய்க்கும் மேலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இவை அனைத்தும் விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நான் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என்பதை உறுதிப்பட தெரிவிக்கிறேன். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டு அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நாமம் வாழ்க என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், விளையாட்டு துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், சந்திரசேகர், புறநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், எம்.பிக்கள் குமார், இளவரசன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், அண்ணாவி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ரத்தினவேல்,பரங்சோதி, ஜெ.பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
வாக்காளர்களுக்கு தனது நன்றி தெரிவிக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா தனது மூன்று நாள் பயணத்தை முடித்துகொண்டு கார் மூலம் விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து 7.35 மணிக்கு தனிவிமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்