முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே முதன்முறையாக குரல் வழி தகவல் சேவை துவக்கம்

புதன்கிழமை, 6 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.- 6 - கெட்டிட் இன்போ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மதுரையில் தன்னுடைய வளர்ச்சித் திட்டத்திற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக குரல் வழியாக தகவல் பெறும் கெட்டிட் ப்ரீஅட்ஸ் என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. இந்த புதிய சேவையை மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கெட்டிட் இன்போசர்வீசஸ் நிறுவனர் தினேஷ்ராவ், டி.வி. நடிகை நீலிமா ஆகியோர் தொடங்கிவைத்தார்.மேலும் எம்கெட்டிட் இன் மற்றும் எம்ப்ரீ அட்ஸ் இன் வாயிலாக வாய்ஸ் சேவையில் கால் பதிக்கிறது. இது குறித்து கெட்டிட் இன்போசர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் தினேஷ் ராவ் கூறுகையில், கெட்டிட் ப்ரீ ஆட்ஸ் என்பது இந்தியாவில் முதலாவது இலவச கிளாசிபைடு சர்வீஸ் ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு போன் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும். இதன் வாயிலாக உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்பனை துரிதமாகவும் திறமையாகவும் நடக்கும் .  ஆன்லைன் பயன்படுத்தாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ரெஸ்பான்ஸ் கிடைக்கும். கால் கெட்டிட் மற்றும் கெட்டிட் ப்ரீ ஆட்ஸ் என்ற இரண்டு சேவையையும் இப்போது வாடிக்கையாளர்கள் 4444 444 என்ற எண்ணுக்கு போன் செய்து பெறலாம். இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் தகவல்கள் மற்றும் ப்ராடக்ட் டிரான்ஷக்னுக்கு எளிமையான, வசதியான, தனிப்பட்ட நம்பகமான தீர்வை அளிக்கும். அதுவும் இலவசமாக அளிக்கும்.
மதுரையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோ பேஜஸ், டைரக்டரிஸ் மற்றும் தகவல் சேவை வாயிலாக கெட்டிட் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்சமயம் எல்லோ பேஜஸ் டைரக்டரிஸ்களின் 6 வெளியீடுகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். மதுரை, தேனி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், திண்டுக்கல், கொடைக்கானல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை கவர் செய்யும் வகையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அழைப்புகளை நாங்கள் பெற்று வருகிறோம். பி2 பி மற்றும் பி2 சி பிரிவுகளில் 1000 க்கணக்கான தொழில்கள் மற்றும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறோம் என்றார்.
கால் கெட்டிட் சேவை வராத்தில் 7 நாட்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கும் சேவையாகும். முக்கிய நகரங்களில் பல்வேறு பிரிவுகளில் எந்த ஒரு தொழிலை பற்றியும் இதில் சரியான தகவல் பெறமுடியும். பொருத்தமான தகவல்களை இதில் பெறமுடியும். வீட்டில் இருப்பவர்களுக்கும், வேலையில் இருப்பவர்களுக்கும் பயணம் செய்பவர்களுக்கும் ப்ராடக்ட்டுகள் சேவைகள் பற்றி எந்த ஒரு தகவலையும் பெற இந்த சேவை மிக எளிமையானதாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்