முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

இந்தோனேசியா,ஜூலை.17 - மத்திய இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்க தொடங்கியதை அடுத்து அப்பகுதி முழுவதையும் கரும் புகையும், சாம்பல் துகள்களும் சூழ்ந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

வடக்கு கல்வேசி மாகாணத்தில் தெற்கு பகுதியில் சுமார் 5,741 அடி உயரம் உள்ள லோகான் மலை சிகரத்தில் இருந்து திடீரென எரிமலை வெடித்தது. தொடர்ந்து எரிமலை குழம்பு பொங்கி வழியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு ஓட தொடங்கினர். போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மலையடிவார பகுதியில் வசித்த பொதுமக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எரிமலை குழம்பு உருகி வருவது பெரும் இறைச்சலாக கேட்டது. போர்க்களத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. எரிமலை குழும்பு உருகி ஓடியதால் அருகே உள்ள காடுகளில் தீப்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: