முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச வீடியோவை ஒளிபரப்ப தடை

புதன்கிழமை, 2 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

பெங்களூர், மார்ச்.2 - நித்தியானந்தா ரஞ்சிதா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப கர்நாடக ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.  கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சில தனியார் டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நாங்கள் அல்ல என்றும் இவை கிராபிக்ஸ் முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இது குறித்து நடிகை ரஞ்சிதா, கர்நாடகா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சில தனியார் டிவிக்களில் நானும் சுவாமியர் நித்தியானந்தாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற ஆபாச காட்சிகளை ஒளிபரப்பினர். அந்த காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் சித்தரிக்கப்பட்டவையாகும். இதன் மூலம் சிலர் என் பெயரை திட்டமிட்டு களங்கப்படுத்த சதி செய்துள்ளனர். இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.  இதனால் எனக்கு மன உலைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகளை இனிமேல் எந்த மீடியாவும் ஒளிபரப்பக்கூடாது என தடைவிதிக்கவேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் ரஞ்சிதா கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.எச். படேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை டெலிவிஷன்களில் ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தார். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony