முக்கிய செய்திகள்

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு: அமெரிக்கா

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.-18- இந்தியா, அமெரிக்கா இடையே நாளை 19 ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பொருளாதார ஒத்துழைப்பு, தீவிரவாத பிரச்சினை மற்றும் ஆக்க பணிகளுக்கு அணுசக்தி பயன்பாடு ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளக் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நாளை இந்தியா வரவுள்ளவார். அவர் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இது குறித்து ராபர்ட் பிளக் செய்தியாளர்களிடம் கூறும் போது, இந்தியாவுடன் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆசியா கண்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி, இந்தியாவுடனான உறவை மேம்படுத்துதல், தீவிரவாத பிரச்சினை, ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஆகியவை பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும். அதே போல் அணுசக்தியை மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: