முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமபுத்திரா நதியின் குறுக்கே அணை - பிரதமர் தகவல்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.5 - பிரமபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதால் இந்தியாவின் நலன் எந்தவிதத்திலும் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ள முடியும் என்று சீனா உறுதி அளித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் பிரமபுத்திரா ஜீவநதி, அசாம் மாநில வழியாக ஓடி கடலில் கலக்கிறது. இந்த நதியால் வடகிழக்கு மாநிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த நிலையில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டி வருகிறது. இதனால் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சீனாவிடம் எடுத்துரைக்கப்பட்டது. சீனாவை நோக்கி ஓடும் நதியின் குறுக்கே நாம் அணை கட்டியிருந்தால் அந்த அணையை சீனா அழித்திருக்கும். இல்லாவிட்டால் இந்தியா மீது போர் தொடுத்திருக்கும். ஆனால் இந்தியாவோ மிகவும் பொறுமையாக சீனாவிடம் எடுத்துக்கூறியது. சீனா அணை கட்டுவது குறித்து நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்ளி எழுப்பினர். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நோக்கி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு பதில் அளிக்கையில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதால் இந்தியாவின் நலன் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது. அந்த உறுதி மொழியை நம்புவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இமயமலையில் உற்பத்தியாகும் பிரமபுத்திரா நதியானது திபெத் வழியாக இந்தியாவுக்குள் பல மாநிலங்களை கடந்து வருகிறது. இப்படி இருக்கையில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதால் இந்தியாவின் நலன்கள் பாதிக்கும் என்று சீனாவிடம் பலமுறை விவாதித்தோம். அதற்கு இது பாசனத்திற்காக கட்டப்படும் அணை அல்ல. நீர் மின்சார உற்பத்திக்காக இந்த அணை கட்டப்படுகிறது. அதனால் நீர் தேக்கப்படமாட்டாது. இந்தியாவுக்கு வரும் தண்ணீர் அளவு குறையாது என்றும் சீனா உறுதி அளித்துள்ளது. சீனாவின் இந்த உறுதி மொழியை விரிவான முறையில் ஆய்வு செய்த பின்னர் அதன் உறுதி மொழியில் நம்பிக்கை வைப்போம் என்றும் மன்மோகன் சிங் கூறினார். நதி நீர் பங்கீடு குறித்தும் சீனாவிடம் எடுத்துரைத்தோம். அதிலும் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றும் சீனா உறுதி அளித்துள்ளது என்றும் மன்மோகன் சிங் கூறினார். தேவையில்லாமல் ஆத்திரப்பட்டு பேசுவது இருநாடுகளிடையே நல்லுறவை பாதிக்கும் என்றும் மன்மோகன் சிங் நிதானமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்