முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஷ்கர் - இ - தொய்பா இயக்க கமாண்டர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு,ஆக.7 - லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஜம்மு-காஷ்மீர் பிரிவு கமாண்டர் நேற்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். இது பாதுகாப்பு படையினர்களுக்கு தேடுதல் வேட்டையின்போது கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 2 பேர் திரிந்துகொண்டியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர். மெஹ்ரோதா பகுதியில் அவர்கள் பதுங்கி இருந்தனர். அந்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சென்றவுடன் மறைந்திருந்த அந்த 2 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினர்களை பார்த்து சரமாரியாக சுடத்தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டதில் தீவிரவாதி அபு உஸ்மான் பலியானான். மற்றொரு தீவிரவாதி தப்பியோடி விட்டான். பலியானவன் அணிந்திருந்த ஆடையை சோதித்து பார்த்தபோது அவன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஜம்மு-காஷ்மீர் பிரிவு கமாண்டர் என்பது தெரியவந்தது. அவனிடம் அதற்கான அடையாளங்கள்,ஆதாரங்கள் இருந்தன. மேலும் அவன் வைத்திருந்த பிஸ்டல் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து பொருட்களும் கைப்பற்றப்பட்டன. தப்பியோடி தீவிரவாதியையும் பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. பாதுகாப்பு படையினர்களுக்கு உதவியாக போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்