முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, ஆக.13 - ஸ்ரீவில்லி அருகேயுள்ளது திருவண்ணாமலை. இது தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும். இங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் சக்திவாய்ந்த தெய்வம் என கருதப்படுவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகைதந்து மலைமேல் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை வணங்கி செல்வது வழக்கம்.

இந்த திருக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு புரட்டாசி சனி கிழமைகளில் ஸ்ரீனிவாசபெருமாள் உற்சவர் மலையை சுற்றி பக்தர்கள் புடை சூழ கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது.

இந்நிலையில் திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாட்டின்படி இன்று (13ந்தேதி) இரவு 6 மணிக்கு ஸ்ரீனிவாசப்பெருமாள் உற்சவர் மலையை சுற்றி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதற்காக மலையை சுற்றி பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு குடிநீர் வசதி, போக்குவரத்து வசதிகள் என விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை கிரிவல விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிசந்திரன், கோவில் செயல் அலுவலர் குருநாதன் மற்றும் கோவில் அலுவலர்கள் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்