முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசம் முழுவதும் ரதயாத்திரை நடத்த சமாஜ்வாடி திட்டம்

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, செப்.- 2 - உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் ரத யாத்திரை நடத்த சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பகுஜன்சமாஜ் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக சமாஜ்வாடி கட்சி மாநிலம் முழுவதும் ரதயாத்திரைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ரத யாத்திரைகள் இம்மாதம் 12 ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளன. உ.பி. முதல்வர் மாயாவதி தலைமையிலான ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த மாபெரும் ரத யாத்திரை நடத்த மாநில சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டு இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி லக்னோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த ரத யாத்திரை மட்டுமல்லாமல் சைக்கிள் பேரணியை நடத்தவும் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாகவும் ராஜேந்திர செளத்ரி கூறினார். 1987 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் கிரந்தி யாத்திரையை நடத்தி பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன மக்களின் ஆதரவை பெற்றார். அதுபோல இப்போது இந்த ரத யாத்திரை மற்றும் சைக்கிள் பேரணிகள் மூலம் தங்களது கட்சிக்கு நல்ல ஆதரவு கிடைக்குமென்று ராஜேந்திர செளத்ரி தெரிவித்தார். வரும் தேர்தலில் அமோக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த யாத்திரைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செளத்ரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்