முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குண்டு வெடிப்பு : காஷ்மீர் - உ.பி.யில் 6 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

டெல்லி, செப். 9 - டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு நாங்களே காரணம் என்று ஹர்கத் அல் ஜிஹாதி இஸ்லாமி என்ற அமைப்பு அனுப்பிய இமெயில் தகவலை அடுத்து அந்த இமெயிலை அனுப்பிய ப்ரவுசிங் சென்டரைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உத்தரபிரதேசத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஐகோர்ட்டு குண்டு வெடிப்புக்கு நாங்களே காரணம் என்று ஹர்கத் அல் ஜிஹாதி இஸ்லாமி (ஹுஜி) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கிஷ்த்வாரில் உள்ள ஒரு இணையதள மையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இணையதள மையத்தின் உரிமையாளர் உட்பட 5 பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உத்தரபிரதேசத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை டெல்லி ஐகோர்ட்டு முன்பு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சந்தேகப் பேர்வழிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 20 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பிற்கு ஹர்கத் அல் ஜிகாதி இஸ்லாமி என்ற அமைப்பு  பொறுப்பேற்பதாக இமெயில் தகவலை அனுப்பியுள்ளது.  இந்த இமெயில் குறித்து சந்தேகம் எழுந்தாலும், இ மெயில் அனுப்பப்பட்ட இடத்தை கண்டறிந்த தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அந்த மையத்தின் உரிமையாளர் மற்றும் 4 பேரை  பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்கள் அதிகம் உள்ளனர். கடந்த 2005 ம் ஆண்டு அயோத்தியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமான நபர் போலீசார் நடத்திய வேட்டையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற குண்டுவெடிப்புக்கு காரணமாகி மரணதண்டனைக்கு காத்திருக்கும் அப்சல்குருவை தூக்கிலிடக் கூடாது என எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாக இ மெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்