முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா ஆட்சியில் அரசின் திட்டங்கள் இல்லங்களை தேடி வருகிறது-ஆர்.பி.உதயகுமார்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சாத்தூர்,செப்.-17 - முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் ஏழை மக்களின் இல்லங்களை தேடி வந்து கொண்டிருக்கிறது என்று சாத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.  அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கினங்க விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஏழாயிரம் பண்ணையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சாத்தூர் தொகுதி கழக செயலாளர் சேதுராமானுஜம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி எம்எல்ஏ, முருகையா பாண்டியன், கிருஷ்ணன், வேலாயுதம், மணிகண்டன், சுப்புராம், வாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கூட்டத்தில் மாணவரணி மாநில செயலாளரும், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த திமுக ஆட்சியில் கோடி,கோடியாக தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கருணாநிதி ஒரு குடும்ப ஆட்சியை நடத்தினார். அப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சிக்கு வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்து தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்து ஜெயலலிதாவை தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் அமர வைத்தார்கள். அவ்வாறு மாற்றத்தை தந்த தமிழக மக்களின் வாழ்வில் ஏற்றத்தை தருகின்ற அரசாக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாத காலத்தில் தமிழக மக்களுக்கு  ஆயிரம், ஆயிரமாயிரம் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். கடைக்கோடி மக்களுக்கும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் 24 மணி நேரமும் இரவு பகல் பாராது உழைத்து நாட்டு மக்கள் நலமுடன் வாழ முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் அவரது ஆட்சி காலத்தில் சாமான்ய மக்களின் இல்லங்களை தேடி வந்து கொண்டிருக்கிறது.
   சாத்தூர் தொகுதியில் 27 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த ஆட்சியாளர்கள் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. அவர்களது வாழ்க்கை தரத்தை மட்டும்தான் சிந்தித்து உயர்த்தி கொண்டார்கள். வெற்றி பெற்றால் அதைச்செய்வேன், இதை செய்வேன் எனறு சொல்லி காகித பூக்கள் அறிக்கைகளை தேர்தல் நேரத்தில் தெரிவித்து சென்றுவிட்டார்கள். எந்த திட்டமும் இந்த தொகுதியில் நடைபெறவில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு அமோக வாக்களித்து வெற்றியை தேடித்தந்த சாத்தூர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக செய்து வருகிறேன். குறிப்பாக குடிநீர் வசதி, சாலைவசதி, சமுதாய கூடம், மின்சாரவசதி, பள்ளிக்கூடம், மருத்துவவசதி, மயானசாலைகள், ரேசன்கடை, பஸ்வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளை நான் செய்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதா அறிவித்த விலையில்லா அரிசி, விலையில்லாத ஆடு மாடுகள், விலையில்லாத லேப்டாப், மிக்சி, கிரைண்டர் போன்றவைகளை வீடு தேடி கொண்டு வந்து சேர்த்து வருகிறோம்.
   ஆலங்குளம் சிமெண்ட் பாக்ட்ரியை நவீனபடுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்திடவும், கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த மண்ணில் அரசு கலைக்கல்லூரியும், 6 உயர்நிலைப்பள்ளியும், மேல்நிலைப்பள்ளியும் தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின் படி செயல்பட்டு வருகிறது.  பொதுமக்கள் என்னிடம் அளிக்கின்ற மனுக்கள் மீது துறை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். சாத்தூர் தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரியான தொகுதியாக மாற்ற முதல்வரிடம் தொடர்ந்து மக்கள் முன் கோரிக்கைகளை முன் வைத்து குரல் கொடுத்து வருகிறேன். தொகுதி மக்களின் முன்னேற்ற திட்டங்களை கொண்டு வருவதற்கு அயராது பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
   கூட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மகளிரணிசெயலாளர் கவுரி நாகராஜன், வக்கீல் முருகன், முனீஸ் சண்முககனி, கேபிள்கண்ணன், சுப்புலட்சுமி, ராமராசு, பேச்சியம்மாள், தாசன், அழகுராஜ், குகன்பாறை ராஜ், காசிப்பாண்டியன், சுப்பிரமணியன், பொன்பாண்டியன், நத்தத்துப்பட்டி வாழவந்தான், புதூர் மயில்சாமி, சிந்துமுருகன், சேர்மன் ரவிச்சந்திரன், கீதா வீரார்பட்டி, ரெட்டயசமுத்திரம், ஏழாயிரம் பண்ணை ராஜேந்திரன், துரைராஜ், வடிவேல்சாமி, நடராஜன், முனியப்பன், கனகராஜ், வேலுச்சாமி, மினுத்தான், வைரமுத்து, காளியப்பன், வக்கீல் லோகேஷ், முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன், தமிழ்செல்வன், சுந்தரமூர்த்தி, சண்முகவேல், முனியசாமி, கணேசன், செல்வராஜ், ஆலங்குளம் ஈஸ்வரி மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக ஏழாயிரம் பண்ணை தூங்கா ரெட்டியபட்டியில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்தார். அங்கு ஒன்றிய கிளை சார்பாக அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்