முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் 500 எழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

ராமநாதபரம் செப் 19 ராமநாதபரத்தில் 500 எழை பெண்களுக்கு திருமணநிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். இதுவரை தாலிகாத்த அம்மனை வணங்கிவந்த பெண்கள் இந்த திட்டத்தால் பயன்பெற்று தாலிக்கு தங்கம் கொடுத்த அம்மாவை போற்றத்துவங்கியுள்ளனர் என்று அமைச்சர் பேசினார் ஏழை பெண்களுக்கு திருமணநிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட துவக்க விழா ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக தகவல்தொழில்நட்பதுறை அமைச்;சர் ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு 500 எழை பெண்களின் திருமணத்துக்கு நிதிஉதவியும் தாலிக்கு தலா 4 கிராம் தங்கமும் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு தாளிக்க வெங்காயம்கூட வாங்கமுடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால் அம்மா அவர்கள் தாலிக்கு தங்கம் கொடுக்கும் உன்னதமான திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை தாலிகாத்த அம்மனை வணங்கிவந்த மக்கள் தங்களுக்கு தாலி வாங்கி கொடுத்த அம்மாவை போற்றத்துவங்கிவிட்டார்கள். உலகம் முழுவதும் வாழும்தமிழ் மக்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். தமிழக மக்கள் கருணாநிதியின் பணத்துக்கு  விலைபோய்விடுவார்களோ என்று அச்சத்துடன் காத்திருந்தபோது நாங்கள் பணத்துக்கு விலைபோகமாட்டோம் என்று கூறி கோடிகளை கொட்டிக்கொடுத்த கருணாநிதியை தெருக்கோடியில் உட்கார வைத்துவிட்டு அம்மாவை கோட்டையில் உட்கார வைத்துள்ளனர். தங்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு அம்மா தேர்தல்களத்தில் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அவற்றையெல்லாம் நிறைவேற்றி வருகிறார். கருணாநிதியின் காசுக்கு விலைபோகாத உங்களுக்கு விலையற்ற பொருட்களை வழங்கிவருகிறார் என்று பேசினார். நிகழ்;ச்சியில் மாவட்ட கழகசெயலாளரும் முதுகுளத்துார் தொகுதி எம்.எல்.ஏவுமான முருகன், பரமக்குடி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன். கழகசிறுபான்மைபிரிவு செயலாளர் அன்வர்ராஜா முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆனிமுத்து மற்றும் கழகநிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்