முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. விலகினாலும் மத்திய அரசு கவிழாது

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.- 7 - தி.மு.க. வெளியேறினாலும் மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை இழக்காது.  543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 260 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிர்ஸ கட்சிக்கு 207 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 19 உறுப்பினர்களும், தி.மு.க. 18 உறுப்பினர்களும் அடங்குவர். தேசியவாத காங்கிரஸ்(9), தேசிய மாநாட்டு கட்சி(3), இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(2), விடுதலை சிறுத்தைகள்(1), ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா(1) ஆகியவையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. 

தற்போது தி.மு.க. வின் 18 உறுப்பினர்கள் விலகுவதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பலம் 260 ல் இருந்து 242 ஆக குறையும். இருநதாலும் சமாஜ்வாடி கட்சியின் 21 உறுப்பினர்களும் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கிறார்கள். இது தவிர 4 உறுப்பினர்களை கொண்ட லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், 3 உறுப்பினர்களை கொண்ட மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வருகின்றன. இவற்றை கணக்கிட்டால் தி.மு.க.வை தவிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony