முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிராக போராடும் யாரையும் ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கும் - பகவத்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

கோரக்பூர், அக்.- 11 - ஊழலுக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் அவர்களை  ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும் என்று  அந்த அமைப்பின் தலைவர்  மோகன் பகவத் கூறியுள்ளார். கோரக்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசினார். அப்போது அவர் கூறுகையில்  ஊழலுக்கு  எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் அவர்களை  ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும் என்றார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துவது  ஆர்.எஸ். எஸ். அமைப்பின் அடித்தள கொள்கை என்றும் அவர் கூறினார். ஊழலுக்கு எதிராக பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே தலைமையில் நடந்து வரும் இயக்கத்தில் ஆர்.எஸ். எஸ்.க்கு உள்ள தொடர்பு குறித்து  சர்ச்சை நிலவி வரும் நிலையில் பகவத்  இந்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நாக்பூரில்  வருடாந்திர தசரா  பேரணி  நடைபெற்றது. அப்போது  அந்த பேரணியில் பேசிய பகவத் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இயக்கங்களில் தங்களது தொண்டர்கள் எந்தவிதமான சுய பலனையும் எதிர்பாராமல் கலந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அன்னா ஹசாரேவுக்கு  ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பலமுறை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago