முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் 21 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.21 - மதுரை மாவட்டத்தில் இன்று 21 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளது.  வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக பகுதியான மதுரை கிழக்கில் பதிவான வாக்குகள் ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்திலும், மதுரை மேற்கில் பதிவான வாக்குகள் திருப்பாலை யாதவா கல்லூரியிலும், திருப்பரங்குன்றத்தில் பதிவான வாக்குகள் திருநகரிலுள்ள சீதாலட்சுமி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், மேலூரில் பதிவான வாக்குகள் தாய் பாலிடெக்னிக் கல்லூரியிலும், அலங்கா நல்லூரில் பதிவான வாக்குகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டியில் பதிவான வாக்குகள் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் செல்லம்பட்டியில் பதிவான வாக்குகள் கருமாத்தூரில் உள்ள அருளானந்தர் கல்லூரியிலும், சேடப்பட்டியில் பதிவான வாக்குகள் எஸ்.கோட்டைப்பட்டியிலுள்ள பராசக்தி மேல்நிலைப்பள்ளியிலும், திருமங்கலத்தில் பதிவான வாக்குகள் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், டி.கல்லுப்பட்டியில் பதிவான வாக்குகள் பேரையூர் காந்தி நினைவு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கள்ளிக்குடியில் பதிவான வாக்குகள் கே.வேளக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.

  நகராட்சி பகுதிகளான திருமங்கலம் நகராட்சியில் பதிவான வாக்குகள் திருமங்கலம் பிகேஎன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டி நகராட்சியில் பதிவான வாக்குகள் கவுனம்பட்டி சாலையிலுள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும், மேலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் எஸ்எஸ்வி பிரைமரி பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.

  மாநகராட்சியை பொறுத்தவரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்த்தில் மதுரை மாவட்டத்தில் 21 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்