முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் உள்நாடு, வெளிநாடு கொள்கைகள் படுதோல்வி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி,அக்.22 - பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் படுதோல்வி அடைந்துவிட்டன என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் மாநிலத்தில் இருந்து ரதயாத்திரையை தொடங்கிய எல்.கே. அத்வானி மகாராஷ்டிரா வழியாக ஆந்திரா வந்தார். பின்னர் அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு மாநில தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அத்வானி பேசினார். அப்போது அவர் கூறுகையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் படுதோல்வியை தழுவியுள்ளது. வங்கதேசத்துடன் மட்டும் நல்லுறவை வைத்து இருக்கிறது. சமீபத்தில் வங்கதேசத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். அப்போது உடன் வரும்படி பாரதிய ஜனதா தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் நாங்களோ,வங்கதேசத்தில் அசாம் பகுதிகள் சில உள்ளன. அவைகளை அசாம் மாநிலத்திற்கு திருப்பிக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிட்டோம் என்றார். அசாம் மாநிலத்தின் நிலப்பகுதியை வங்கேசத்திற்கு கொடுத்தது எங்களுக்கு தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் இந்தியா-வங்கதேசம் இடையே ஏற்பட்ட நில ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து இருப்போம். பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் நிலம் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் அத்வானி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!