முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் நிலையத்துக்கு சென்று கட்சித் தொண்டர்களை அதிரடியாக மீட்ட மம்தா

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, நவ. - 10 - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள காவல் நிலையத்துக்கு அதிரடியாக நுழைந்து அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த கட்சித் தொண்டர்களை விடுவித்தார்.  சேவக்சங்கம் என்ற அமைப்பு சார்பில் ஜகதாத்ரி அம்மன் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. சித்தரஞ்சன் புற்று நோய் ஆராய்ச்சி மையம் அருகே ஊர்வலம் வந்த போது அதிக சப்தமுள்ள பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதிக சப்தத்துடன் பாடல்களும் இசைக்கப்பட்டன. இதை அப்பகுதியை சேர்ந்த கார்னர் என்ற இளைஞர் அமைப்பினர் தட்டிக் கேட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த கலவரத்தில் பலர் காயமடைந்தனர். பாதுகாப்புக்கு சென்ற 12 க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர். இரு குழுவினருமே முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது சகோதரர் பானர்ஜி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியதால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்கியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. எனினும் கலவரத்தில் ஈடுபட்டதாக 2 பேரை பிடித்து  உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது திடீரென போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்த முதல்வர் மம்தா பானர்ஜி இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்