முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.18.50 லட்சத்தில் சுனாமி எச்சரிக்கை மையம்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கன்னியாகுமரி, நவ.11 - கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறை அருகே ரூ. 18.50 லட்சத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004 ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கன்னியாகுமரி, பிள்ளைதோப்பு, கொட்டில்பாடு, கீழமணக்குடி உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இதையடுத்து மத்திய அரசின் கடல்சார் வாரியம் சார்பில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி கன்னியாகுமரி பூம்புகார் படகு துறையில் இம்மையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக படகு துறையை ஒட்டி உள்ள கடல் பகுதியில் 10 மீட்டர் ஆழத்துக்கு கான்கிரீட் பிளாக்குகள் போடப்பட்டன. இதுவரை 2 டன் எடையுள்ள பிளாக்குகள் கடலுக்குள் போடப்பட்டுள்ளன. இந்த பிளாக்குகள் இணைக்கப்பட்டு அதன் மேல் சுனாமி எச்சரிக்கை மையத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் நவீன கருவிகள் பொருத்தப்படும். இதையடுத்து கடல் அலையின் உயர் மட்டம், கடல் நீர் மட்டம் குறைதல், அலையின் வேகம், நீரின் தன்மை, சுனாமிக்கான அறிகுறிகள் ஆகிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நவீன கருவிகள் பொருத்தப்பட்டதும் இம்மையம் முழுவீச்சில் செயல்பட தொடங்கும் என இம்மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்