முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்கோ மாநாட்டு: எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, நவ.18 - இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான வர்த்தக, பொருளாதார, அறிவியல்  தொழில்நுட்ப, கலாச்சார கூட்டு கமிஷனின் 17-வது ஒத்துழைப்பு மாநாடு மாஸ்கோவில் உள்ள பிரசிடெண்ட் ஓட்டலில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று மாஸ்கோ போய்ச் சேர்ந்தார். மாஸ்கோவில் அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். வருகிற  டிசம்பர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு குறித்து இந்திய-ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முன்கூட்டியே விவாதிக்க உள்ளனர்.
இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் இந்திய - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான இந்த மாநாட்டில் ரஷ்ய துணை பிரதமர் செர்ஜி இவானோவை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம் போன்ற துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்