விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Image Unavailable

 

புது டெல்லி,நவ. 20- விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது.  கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உட்பட 5 விமான நிறுவனங்கள் ஜூலை - செப்டம்பர் மாதங்களில் மட்டுமே ரூ. 2,500 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளன. இதனால் தனியார் விமான நிறுவனங்கள் திணறியபடி உள்ளன. கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை பாதியாக குறைத்து கொண்டது. வங்கிகள் 400 கோடி கடன் கொடுத்தால்தான் விமான நிறுவனத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலைக்கு கிங்பிஷர் தள்ளப்பட்டுள்ளது. வருவாய் இழப்பை சரிக்கட்ட கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு விமான நிறுவனங்கள் வந்துள்ளன. சுமார் 25 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அடுத்த(டிசம்பர்) மாதம் முதல் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தவுள்ளது. இதை மத்திய விமான போக்குவரத்து துறை கவனித்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்