முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியார் பிரச்சினை: முதல்வர் கடிதம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ. 30 - முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினையில் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியால் எல்லைப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டு ள்ளது என்றும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கேட்கு கொண்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியார் அணைப் பிரச்சி னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத் தின் விபரம் வருமாறு - 

முல்லைப் பெரியார் அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசின் அணுகுமுறை குறித்து கடந்த வாரம் (23.11.2011) தங்களுக்கு கடிதம் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இந்தக் கடிதத்தை மீண்டும் எழுது கிறேன். 

முல்லைப் பெரியார் அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருந்த போதிலும், கேரள அரசு இந்த அணை பாதுகாப்பாக இல்லை என்ற காரணத்தை கூறி, இதற்கு தீர்வு அங்கு புதிய அணை கட்டுவது தான் என்று முடிவு கட்டியுள்ளது. 

இதற்காக புதிய அணை கட்டும் முயற்சியில் தொடர்ந்து கேரள அரசு ஈடுபட்டு வருவதாக பத்திரிகைகள் மூலமாக நான் அறிகிறேன். இத  ன் எதிரொலியாக கேரளாவிற்கு வரும் தமிழக அரசு பஸ்கள் மீது விஷமிகள் கல்வீசித் தாக்கி வருகின்றனர். 

பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் பஸ்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. தவிர, மாநில எல்லைப் பகுதியில் பதட்டம் நில வுகிறது. இது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனா ல் எல்லைப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அவ   ர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பிரதமர் இதில் தலையிட்டு தமிழர்கள் மீது விஷமிகள் தாக்கு தல் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். கேரள அரசுக்கு இது தொ டர்பாக ஆலோசனை வழங்க வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க் கை பாதிக்கப்படக் கூடாது. 

முல்லைப் பெரியார் அணை புதிய அணை போன்று மிகுந்த பாதுகா ப்புடன் இயங்கி வருகிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும் புகிறேன். 

முல்லைப் பெரியார் அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்காக விஷேச கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எனவே கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை கை விட தகுந்த ஆலோசனை அளிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை பெரிது படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்க வேண்டும். 

நான், ஏற்கனவே இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த 23 .11.2011 அன்று தங்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலும் இதனை குறிப்பிட்டு  இருந்தேன். எனவே இரண்டு மாநில மக்களிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க கேரள அரசுக்கு தகுந்த ஆலோசனை அளிக்க வேண்டும் என்று நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். 

இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு உடனடியாக உரிய நடிவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்