முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு கடிதம்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, டிச.1 - முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்க கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உ.பி. முதல்வர் மாயாவதி மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு முற்பகுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான இம்மாநிலத்தில் முஸ்லீம்களின் ஓட்டுக்களை பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உ.பி.முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ஏற்கனவே ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இப்போது அவர் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

முஸ்லீம் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தனது அரசு செய்திருப்பதாகவும்  சில திட்டங்கள் மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் தாமதாகி வருகின்றன என்றும் அந்த கடிதத்தில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம்களுக்கான நலத்திட்டங்களை விரைந்து முடிக்க ஏதுவாக மத்திய அரசின் நிதி உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்வி, அரசு வேலை, தொழில்கள் போன்ற இட ஒதுக்கீடுகள் பின் தங்கிய மக்களுக்கு குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு கிடைக்க பிரதமர் மன்மோகன் சிங் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தான் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்கனவே ஒரு கடிதத்தை அனுப்பியிருப்பதையும் அதில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் முஸ்லீம்களுக்கு  இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இட ஒதுக்கீட்டிற்குள் முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அந்த  கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் மாயாவதி எழுதிய கடிதத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

 சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்காக  மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்த கடிதத்தில் மன்மோகன்சிங் குறிப்பிட்டு இருத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்