முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு நிலநடுக்க புகாருக்கு விளக்கமளிக்க-தமிழகத்திற்கு, ஆனந்த்குழு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

டெல்லி, டிச.- 6 - முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதால் அணைக்கு ஆபத்து இருப்பதாக கேரள அரசு கூறியுள்ள புகாருக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான  நிபுணர்குழு அனுமதி அளித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை  குறித்து ஆய்வுசெய்ய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஐவர் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் இடம்பெற்றுள்ளார். இந்த குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியபின் தனது அறிக்கையை ஜனவரி மாத இறுதியில் உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இக்குழுவிடம் கேரள அரசு நிலநடுக்கம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள புகார் மனுவுக்கு பதில் அளிக்க அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டது. கேரள அரசின் மனுவில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் நில நடுக்கங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் அணைக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  இதை மறுத்த தமிழக அரசு, இதுகுறித்து விளக்கம் அளிக்க அனுமதி கோரியது. இதை ஏற்ற ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு 10 நாட்களுக்குள் தமிழக அரசு தனது விளக்கத்தை தாக்கல் செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
மேலும் இரு மாநில வக்கீல்களும் விவாதம் நடத்தக் கோரி நிபுணர் குழுவிடம் மனு கொடுத்தனர். இதையும் ஏற்ற நிபுணர் குழு, வருகிற ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரு மாநிலங்களும் தமது வாதங்களை முன்வைக்கலாம் என்று அனுமதி அளித்தது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு குழுக்கள் அணையின் பாதுகாப்பு குறித்து சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்