முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் உறங்கான்பட்டியில் ஐந்து கிராம மக்கள் உண்ணாவிரதம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர்,டிச.- 26 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி இங்கு நேற்று முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டப்போவதாக மிரட்டும் கேரள அரசை கண்டித்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாமல் தாமதப்படுத்தி கொண்டிருக்கும். மத்திய அரசை கண்டித்தும் ஐந்து கிராமமக்கள் ஒற்றுமையாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதில் உறங்கான்பட்டி, அழகிச்சிபட்டி, குப்புச்சிப்பட்டி, கொட்டானிப்பட்டி, புதுப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் ஜாதி,மத, கட்சி வேறுபாடுயின்றி உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். மேலும் நாளை வெள்ளளூர் பகுதிகளில் உள்ள கிராமமக்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளளூரில் இருந்து மேலூர் தாலுகா அலுவலகம் வரை நடைபயணமாக வந்து மேலூர் தாசில்தார் மோனாவிடம் முல்லை பெரியாறு அணை தொடர்பாக மனு கொடுக்க உள்ளனர். இந்நிலையில் முல்லைபெரியாறு அணையின் தன்மையை கண்டறியும் நிபுணர் குழு நாளை மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளபோவதாக தகவல்கள் தெரிகின்றன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்