முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் கிறிஸ்தவ கல்லூரியில் 18ம்ஆண்டு விளையாட்டுவிழா

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

கொடைக்கானல், ஜன. - 21 - கொடைக்கானல் கிறிஸ்தவ கல்லூரியின் 18 ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.  இந்த விழாவிற்கு கல்லூரி தாளாளரும், முதல்வருமான டாக்டர் சாம் ஆபிரகாம் தலைமை வகித்தார். துணை தாளாளர் டாக்டர் கீதா ஆபிரகாம் போட்டிகளை துவக்கி வைத்தார். 2 நாட்கள் நடந்த இந்த போட்டிகளில் கல்லூரியின் மார்க் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. மேத்யூ அணி 2 ம் இடத்தினை பிடித்தது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக விளையாட்டு துறை இயக்குனர் டாக்டர் சாத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். கிறிஸ்தவ கல்லூரியின் விளையாட்டு துறை இயக்குனர் சதீஷ்குமார், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைப்பு செய்தனர். விழாவிற்கு கல்லூரி இயக்குனர் ஸ்டான்லி தாமஸ், துணை முதல்வர் லட்சுமிசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 6 ம் ஆண்டாக மார்க் அணி சேம்பியன் பட்டத்தை வன்று சாதனை படைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்