எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் விரைவில் நலம் பெற இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்த அவர், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும், அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரேசில் அதிபர் விரைவில் நலம்பெற இந்திய பிரதமர் மோடியும் பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனது நண்பரும் பிரேசில் அதிபருமான ஜெயிர் போல்சனரோ குணமடைய பிரார்த்தனை செய்வதுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் என பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


