முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 24-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020      தமிழகம்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திருப்பத்தூருக்கு வருகிற 24-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் அவர், புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் கூடுதல் கலெக்டர் அலுவலகத்துக்கு தேவையான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட ஊரக முகமைக் கூடுதல் அரங்கு, வெளிப்புறத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் பெரிய அரங்கு என ரூ.5 கோடியே 73 லட்சத்தில் பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் நடந்து வருகிறது.  

அதேபோல் எலவம்பட்டி கிராமத்தில் ரூ. ஒரு கோடியே 39 லட்சத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாகன ஓட்டிகள் உரிமம் பெற 8 வடிவிலான தரை தளம் உள்ளிட்ட பணிகள், ரூ. ஒரு கோடியே 44 லட்சத்தில் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற கூடுதல் நீதிபதி மற்றும் சார்பு நீதிபதிக்கு வீடுகள், கதிரிமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பணிகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப்பணிகள் ஆகியவற்றை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர லிங்கம், கோட்ட பொறியாளர் பழனி, உதவி பொறியாளர் ரவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு கட்டிடங்கள் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது, விரிசல் உள்ளதா, கழிவறையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்தும், மேல்தளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்வது குறித்தும், சுவர்களுக்கு வர்ணம் பூசுவது உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், மணிமேகலை சேகர், அஸ்வின், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  அப்போது அதிகாரிகள் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 24-ம் தேதி கொரோனா தொற்று குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறார். அன்றைய தினம் தமிழக முதல்வர் அரசு புதிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார், என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து