முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021-ம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் : மூத்த மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அது இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் அந்தோனி பாசி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அங்கு இதுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். 66.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் புதிதாக 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டு பிடிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். இதனால் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

இந்த நிலையில் அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணரான அந்தோனி பாசி கூறியதாவது:- கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் நாம் இருந்த இயல்பு நிலைக்கு திரும்புவதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது 2021-ம் ஆண்டுக்குள் இருக்கும். அல்லது 2021-ம் ஆண்டின் இறுதியில் கூட இருக்கலாம்.

என்னை அரசு நிர்வாகம் அமைதியாக இருக்கும்படி கூறும் தகவலில் உண்மை இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.  உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து