முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      அரசியல்
Image Unavailable

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. கூறி உள்ளது.

கொரோனா தொற்றுநோய் கால கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகும். அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்.டி.ஏ) பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் (எம்ஜிபி) நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது.  தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில்  நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் உள்ளது. மேலும் அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

19 லட்சம் வேலை வாய்ப்புகள்,  3 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமனங்கள்,  1 0 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க பீகாரை ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவது,  ஒரு கோடி பெண்களை தன்னம்பிக்கை கொள்ளச் செய்வது,  சுகாதாரத் துறையில் ஒரு லட்சம் வேலைகள்,  30 லட்சம் பேருக்கு புக்கா வீடுகள்,  ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மொபைல் மற்றும் டேப் என கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து