எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எது தவறு, எது சரி என நீங்களும் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன், நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும். நேருக்கு நேர் வந்து பேசுமாறு ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளி கூட்டத்தில் சவால் விடுத்து உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நேற்று மாநகர் மாவட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக கருங்கல்பாளையம் காவிரி கரையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், தங்கமணி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையை அசைத்தார். பின்னர் பன்னீர்செல்வம் பார்க் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
முன்னதாக ஊழல் குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த சவாலை ஏற்றுக் கொண்டதாக கூறிய மு.க. ஸ்டாலின், அதற்கு சில தேவையற்ற நிபந்தனைகளை விதித்துள்ளார். சவாலை ஏற்றுக் கொள்பவர்கள் நேரடியாக விவாதிக்க வேண்டுமே தவிர, நிபந்தனைகளை விதிப்பது விசித்திரமானது. முதல்வர் விடுத்திருந்த சவாலில் இருந்து ஸ்டாலின் ஜகா வாங்கியிருப்பது இதன்மூலம் கண்கூடாக தெரிகிறது. இது பற்றி குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எது தவறு, எது சரி என நீங்களும் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன்,நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் நேருக்கு நேர் வந்து பேசுங்கள் என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பதில் சவால் விடுத்தார்.
ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று அழைப்பு விடுத்தேன். ஆனால் ஸ்டாலினோ நீதிமன்றத்தில் இருந்து வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று கூறுகிறார். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் அவர் முடிச்சு போடுகிறார். என்னுடைய ஆட்சியில் மடியில் கனம் ஏதும் இல்லை. எனவே நேரில் வாருங்கள் பேசுவோம் என்று முதல்வர் எடப்பாடி பதில் சவால் விடுத்தார்.
இரவு பகலாக அம்மாவின் அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது என்றும் மக்களை பற்றி சிந்திக்காமல் பொய் கூறி வரும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அம்மா மறைவிற்கு பின் நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் இதுவாகும், எனக்குப் பின்னால் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வாழையடி வாழையாக நின்று நாட்டு மக்களுக்கு பாடுபடும் என்று அம்மா சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய்ப் பிரசாரம் செய்து அவதூறு பரப்பி வருகிறார். அரசு மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர்கள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நமது அரசு மற்றும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது. எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மினி கிளினிக் 6 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நாடே போற்றும் இந்த திட்டத்தை ஒருவர் மட்டும் குறை கூறுகிறார். என்ன குறைபாட்டை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் அம்மா மினிகிளினிக் டாக்டர்களிடம் சோதனை செய்து கொள்ளலாம். 2 ஆயிரம் மினிகிளினிக்குகள் திறந்து இந்த அரசு சாதனை படைத்துள்ளது.
தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சியிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் (மக்கள்) சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒருவர் தவறு செய்தால், அவர் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை. இன்று தமிழகம் சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இழந்த பொதுமக்களுக்காக 8 மாதம் ரேசன் கடையில் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 40 கிலோ அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு தூணாக இருந்து மக்களை காத்த ஒரே அரசு அம்மாவின் அரசு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். தை பொங்கலையொட்டி அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பணம், சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி வழங்கியுள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து இந்த அரசு மக்களுக்கு செய்து வருகிறது. சுய உதவி குழுவினருக்கு 80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரூ. 8 ஆயிரம் கோடி தான் கடன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் அம்மா அரசு கடன் உதவி வழங்கியுள்ளது.
இந்த அரசு பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருதுகள் பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றுள்ளது. மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை, நீர்மேலாண்மை, மின்மிகை மாநிலம், கல்வி என பல துறைகளிலும் தேசிய விருது பெற்று தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. தி.மு.க. ஆட்சியில் சரியான நிர்வாக திறமை இல்லாததால் ஒரு விருது கூட பெற முடியவில்லை. சாயப்பட்டறை கழிவு நீர் அமைக்க 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி உதவிக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு சுத்தமாக இருக்க பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு செய்ய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றுள்ளது. நீர் மேலாண்மை, கல்வி உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தற்போது 100-க்கு 49 பேர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகத்தில் தான் அதிகம்பேர் படித்து வருகிறார்கள். இது ஸ்டாலினுக்கு தெரியாது. மக்களை பற்றி சிந்திக்காமல் அவர் கூறுவது அனைத்தும் பொய். பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும். இரவு, பகல் பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. எனவே வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.