முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்ததும் டெலிவரி: இந்தியன் ஆயில் நிறுவனம் விரைவில் துவக்கம்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு, சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்த உடனே டெலிவரி செய்யும் திட்டத்தை துவக்க உள்ளது.

தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்நிறுவனம், ஏஜன்சி ஊழியர்கள் வாயிலாக, தினமும் சராசரியாக, 2.50 லட்சம் காஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்கிறது. வாடிக்கையாளர்கள், ஒரு சிலிண்டர், இரண்டு சிலிண்டர் பிரிவில் கியாஸ் இணைப்பு பெற்றுள்ளனர்.

ஒரு கியாஸ் சிலிண்டரின் எடை 14.20 கிலோ ஆகும். இரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளவர்கள், பயன்படுத்தி வரும் சிலிண்டர் தீர்ந்து விடும் முன் பதிவு செய்வர். சிலிண்டர் திடீரென தீர்ந்து விட்டாலும் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் இரண்டாவது சிலிண்டரை பயன்படுத்துவர். ஏஜன்சி ஊழியர்கள், காலி சிலிண்டரை ரிட்டர்ன் எடுத்து விட்டு புதிய சிலிண்டர் டெலிவரி செய்வர்

இதனால் ஒரு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், திடீரென கியாஸ் தீர்ந்து விட்டால், அவர்கள் பதிவு செய்தாலும், மறுநாள் தான் சிலிண்டர் கிடைக்கும். இதனால், அவர்கள் சமைக்க சிரமப்படுகின்றனர். இதையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனம், தத்கல் எனப்படும், விரைவு டெலிவரி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பதிவு செய்த உடனே, டெலிவரி செய்யப்படும். இதனால், அடுத்த நாள் வரை காத்திருக்க தேவையில்லை. இதற்கு, கட்டணம் வசூலிக்கப்படலாம் என, தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து