முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா: உலக வங்கி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

சர்வதேச அளவிலான வளர்ச்சி அதிகரிக்க, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், முக்கிய காரணிகளாக உள்ளன என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத் தொடரின் துவக்க நிகழ்ச்சியில், உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு சில நாடுகளில், கொரோனா தடுப்பூசி கிடைப்பதிலும், மக்களின் வருவாயிலும் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சில நாடுகளில், இந்த வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. வங்கி வட்டி விகிதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஏழை நாடுகள் அதிக வட்டி விகிதங்களை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் வட்டி விகிதங்கள் குறைந்த அளவுக்கு, அந்நாடுகளில் குறையவில்லை. கடன் பெறுவதிலும் சமத்துவமின்மை நிலவுகிறது.

சிறு வணிகர்கள், புதிதாக தொழில் துவங்க விரும்புவோர், பெண்கள் உள்ளிட்டோர், கடன் பெறுவதில் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தாதது மிகுந்த கவலை அளிக்கிறது. இருந்தபோதிலும், சர்வதேச வளர்ச்சியானது அதிகரித்துள்ளது. இதில், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து