முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநோதய சித்தம் - திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

டம்மீஸ் ட்ராமா என்னும்  குழுவினரால் மேடை நாடகமாக நடத்தப்பட்டுவந்த இந்த விநோதய சித்தம் தற்போது சினிமாவாகியிருக்கிறது. படத்தின் கதை இதுதான். கதாநாயகனான தம்பி ராமைய்யா மிகவும் கண்டிப்பான ஒரு மனிதர். எல்லாம் ஒழுங்குடன் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர். மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

தனது 25வது திருமண நாளைக் கொண்டாடவிருந்த நிலையில், திடீரென ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில் மரணமடையும் அவரை அழைத்துச் செல்ல காலன் வருகிறான். தனக்கு நிறைய வேலைகள் இருப்பதால் சற்று அவகாசம் தரும்படி கேட்கிறார்.

90 நாட்கள் அவகாசம் தருகிறான் காலன். அந்த 90 நாட்களில் ராமைய்யாவுக்கு  ஏற்படும் புரிதல்கள்தான் மீதிப் படம்.  திரைக்கதையும் சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தில் வரும் ஒரு காட்சிகூட தேவையில்லாத காட்சியாக அமையவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சுவாரஸ்யமான அம்சம், அந்த காட்சியை ரசிக்கவைக்கிறது. 

இந்தப் படத்தில் காலனாக நடித்திருப்பது படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி. ஒவ்வொரு காட்சியிலும் காலனாக வரும் சமுத்திரக்கனி என்ன சொல்லப்போகிறார் என கவனிக்க வைத்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி, முனீஷ் காந்த், ஜெயப்பிரகாஷ், சஞ்சிதா ஷெட்டி என எல்லாருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.  திரை ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத முகங்கள் சிலர் வந்தாலும், அவர்களும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறார்கள். 

தம் இருப்பு குறித்தும் தாம் செய்யும் காரியங்கள் குறித்தும் மனிதர்கள் கொண்டிருக்கும் தேவையில்லாத நம்பிக்கைகள், பெருமிதங்கள் ஆகியவற்றை உடைக்கும் தத்துவ உரையாடல்தான் இந்தப் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து