Idhayam Matrimony

அமெரிக்காவை நோக்கி சாண்டி புயல் நெருங்கிறது

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க்,அக்.- 30 - அமெரிக்காவை நோக்கி சாண்டி என்ற சூறாவளி புயல் நெருங்கிக்கொண்டியிருக்கிறது. இதனால் பலத்த சேதம் ஏற்படும் என்பதால் தாழ்வான பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல முக்கிய நகரங்களுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பல முக்கிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக நியூயார்க் மற்றும் சில மாகாணளங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்தநிலையில் அமெரிக்காவின் கிழக்கு கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகி உள்ளது. இந்த புயலானது சூறாவளி காற்றுமாதிரி வேகமாக வீசுவதோடு பயங்கர மழைய்யும் பெய்யும். அதோடு பனிக்கட்டி மழையும் பெய்யும் என்றும் மணலையும் அள்ளி வீசும் என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடற்கரையில் உள்ள மணலையும் அள்ளிக்கொண்டு இந்த புயல் வீசும் என்பதால் இதற்கு சாண்டி என்று பெயர் இடப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் வாஷிங்டன், நியூயார்க், பாஸ்டன் ஆகிய மாகாணங்களை நோக்கி இந்த புயல் வீசும் என்பதால் அந்த பகுதிகளில் குறிப்பாக நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன் ஆகிய நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொழம்பியா,மாஸ்சுசெட்ஸ், நியூயார்க் ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் ஒபாமா பிறப்பித்துள்ளார். மேலும் புயல் வீசும் பகுதிகளில் தாழ்வான இடத்தில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்குமாறும் இந்த மாகாணங்களில் கவர்னர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் புயலின்போது விமானம் பறந்தால் விபத்து நேரிடும் என்று கருதி, அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.நியூயார்க் நகரில் ரயில்,பஸ் சர்வீஸை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீசிய ஐரினி புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போதும் நியூயார்க் நகரில் ரயில் சர்வீஸ் நிறுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த 14 மாதங்களில் மீண்டும் அதேநிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராணுவமும் உஷாராக வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago