முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடலூர் வள்ளலாரை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ராமலிங்க அடிகளார் ஜோதியான இன்று(நேற்று) அணையா அடுப்பு மூலம் பட்டினி வயிறுகளின் பசியாற்றிய வடலூர் வள்ளலாரைப் போற்றுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவருட்பா பாடல்களை இயற்றிய ராமலிங்க சுவாமிகள், 1823-ல் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். உயிர்களின் மேல் இரக்கம் மிகுந்து அருளாளராகத் திகழ்ந்தவர். ராமலிங்கரை  அருட்பிரகாச வள்ளலார் என அழைத்து மகிழ்ந்தனர் மக்கள். 1867-ல் வடலூரில் சத்திய ஞான சபை அமைத்து பசியோடு வருபவர்களுக்கு உணவளித்தார். அவர் மறைந்த பின்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் அவரது ஆதரவாளர்கள் எளிய மக்களுக்கு உணவளிக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர் 1874-ல் தைப்பூசத் திருநாளில் அவர் ஜோதியான நாள் ஒவ்வொரு ஆண்டும் வடலூரில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வள்ளலாரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளின்  நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து