முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. ஓபன் பெண்கள் ஒற்றையர்: ஆஷ்லே பார்டி, எலினா அடுத்த சுற்றுக்கு தகுதி

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி மற்றும் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஷ்லே வெற்றி...

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று 2-வது சுற்று போட்டிகள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியுடன் மோதினார். இதில்  6-1,6-1 என நேர் செட்டில் பார்டி வெற்றிபெற்றார். 

எலினா வெற்றி...

8ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசா 6-0,6-3  என இத்தாலியின் மார்டினா ட்ரெவிசனை சாய்த்தார். 15ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 6-3,5-7,5-1 என பிரான்சின் ஹார்மனிடானை வென்றார்.

ஜெசிகா தகுதி...

பெலாரசின் விக்டோரியா அசரென்கா, 6-1,6-2 என சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேனையும், இத்தாலியின் கமிலா ஜியோர்ஜி, 6-2,7-6 என செக்குடியரசின் தெரேசா மார்ட்டின்கோவாவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா ஆகியோரும் 3வதுசுற்றுக்குள் நுழைந்தனர். ஆடவர் ஒன்றையர 2வதுசுற்றில், இத்தாலியின் லோரென்சோ சோனேகோ, 2-6,6-2,6-3,6-1 என்ற  செட்கணக்கில், ஜெர்மனியின் ஆஸ்கார்ஒட்டேவை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து