முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசு உயர்வு

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 17 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 35 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுவதாக பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் அமலில் உள்ள விற்பனை வரி அல்லது வாட் வரியைபொருத்து இந்த விலை உயர்வில் சிறிது வேறுபாடு இருக்கும். டெல்லியில் லிட்டருக்கு 35 காசு உயர்த்தப்பட்டதை அடுத்து பெட்ரோல் விலை அங்கு ரூ. 67.56 ஆக இருக்கும். சென்னையில் இதுவரை லிட்டர் ரூ. 70.57 க்கு விற்கப்பட்டு வரும் பெட்ரோல் தோராயமாக இனி ரூ. 70.92 க்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் விலை கட்டுப்பாடு நவம்பரில் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு முதல் தடவையாக இப்போது தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago