முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் விலை வரம்பை ஏற்க ரஷ்யா மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      உலகம்
Russia 2022 12 04

Source: provided

மாஸ்கோ, டிச. 05- ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் விலை வரம்பை ரஷ்யா ஏற்க மறுத்துள்ளது. 

ரஷ்யாவில் இருந்து வரும் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்களாக  ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து, ஜி-7 அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பணக்கார நாடுகள் இந்த விலை வரம்பை நிர்ணயித்துள்ளன. மேலும் ரஷ்யாவிலிருந்து உலகிற்கு வரும் எண்ணெய் தடையின்றி தொடர்ந்து வழங்குவதே இதன் நோக்கமாகும். 

ரஷ்ய எண்ணெயின் விலை பீப்பாய்க்கு $60 என்ற உச்சவரம்பை நிர்ணயிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது, அதே போல, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவை ஆஸ்திரேலியா மற்றும் ஜி-7 நாடுகளும் ஆதரித்துள்ளன. உக்ரைன் போர் தொடங்கிய பின், ஐரோப்பிய ஒன்றியம் ஜி-7 நாடுகளும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்க்கு தடை விதித்துள்ளன. 

இந்நிலையில், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலை வரம்பு ரஷ்யா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த ஒரு முக்கியமான கருவியாகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எண்ணெய் விநியோகம் சீராக கிடைத்திட வழி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் விலை வரம்பை, ரஷ்யா ஏற்க மறுத்து இந்த முடிவை நிராகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து