முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் : மத்திய அரசு ஒப்புதல்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியா கவுரி உள்பட 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 5 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஐகோர்ட் மதுரைக்கிளை மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் உள்ளிட்ட 56 வழக்கறிஞர்கள், விக்டோரியா கவுரியை நீதிபதியாக்க வலியுறுத்தி கடிதம் எழுதினர். எதிர்ப்பை மீறி விக்டோரியா கவுரி நியமனத்துக்கு மத்திய  அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து